ஞாயிறு, 24 அக்டோபர், 2010

உயிரே உன்னை ரசிப்பேன்

பரந்து விரிந்த வானத்தை ரசிப்பேன்
தென்றல்தனில் அசையும் மரத்தையும் ரசிப்பேன்
வண்டு மொய்க்கும் மலரையும்  ரசிப்பேன்
அலைந்து விளையாடும் கடலையும் ரசிப்பேன்
பறந்து திரியும் பறவையும் ரசிப்பேன்
இரவில் உலா வரும் நிலவையும் ரசிப்பேன்
இனிய கரு மேகத்தை ரசிப்பேன்
அன்பே உன் இதழை ரசிப்பேன்
உன் விழிகளை ரசிப்பேன்
என் உயிரே நான் உன்னையோ அல்லது
இயற்கையையோ ரசிக்கவில்லை இறைவன்
படைத்த அழகினைத்தான் ரசித்தேன்.

                          
                                                      காதலுடன்
                                                   கவிதை வித்யா      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக