சனி, 23 அக்டோபர், 2010

உண்மைகள் யாருக்கும் தெரியாது

மழை பிறப்பது மண்ணுக்குத் தெரியாது
நிலா பிறப்பது வானத்திற்கு தெரியாது
நீர் பெருகுவது கடலுக்கு தெரியாது
நான் தான் பிறப்பேன் என்று என்
       அன்னைக்கு தெரியாது
தான் நல்லவனா கெட்டவனா என்று
     சிறு பிள்ளைக்கு தெரியாது
இதழ் சிரிப்பது இதயத்திற்கு தெரியாது
மனம் அழுவது சில மனிதர்களுக்கு தெரியாது
மரம் வளர்வது தாங்கும் வேர்களுக்கு தெரியாது
இதயம் கரைவது இளைஞருக்கு தெரியாது
காதலில் எத்தனை விழிகள் என
              காதலர்களுக்கே தெரியாது
எறும்பு கடக்கும் பாதைகள் எறும்புக்கே தெரியாது
ஊமைகளுள் உழலும் உண்மைகள்
                 எவருக்குமே தெரியாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக